சிறுமிக்கு பாலியல் தொல்லை; முன்னாள் எம்.எல்.ஏவுக்கு வலைவீச்சு!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (11:13 IST)
நாகர்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கன்னியாக்குமரி அருகே உள்ள கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சமீபத்தில் காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிறுமியை தேடி வந்தனர்.

சிறுமியை ஒருவழியாக கண்டுபிடித்த போலீஸார் அவரை குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டபோது நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் சிலர் சேர்ந்து இரண்டு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நாகர்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேனை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை. இந்நிலையில் தலைமறைவாகியுள்ள நாஞ்சில் முருகேசனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்