நான் யார் என்று தெரியுமா? எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது: சீமான் ஆவேசம்.!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (14:51 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஆவேசமாக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
 
2 லட்சுமி வெடியை வைத்து பெரிய மலையை தகர்க்க பார்க்கிறார்கள், இப்போது அழைப்பாணை வழங்கும் காவல்துறை 13 ஆண்டுகளாக என்ன செய்தது? நான் யார் என்று தெரியுமா? எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. 
 
சிரிக்க சிரிக்க பேசுபவன் என்று நினைக்க வேண்டாம், நான் ரொம்ப சீரியஸான ஆளு,"ஒரு லட்சம் துப்பாக்கிகளை கடந்து சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்து வந்தவன் நான். என்னிடம் தனலட்சுமியும் தான்யலட்சுமியும் தான் இல்லை, முடிந்தால் 10 பேரை அனுப்பி வையுங்கள், எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது,  எனக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது  என சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்