'சீமானுக்கு எதிரான இந்த வழக்கு என்னுடையது., வீரலட்சுமி- சீமான் இடையிலான பிரச்சனை அல்ல' என்று விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாக சீமானிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சம்மனுக்கு பதில் அளித்த சீமான் நான் ஆஜராகும் போது நடிகை விஜயலட்சுமி அதே காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி இருப்பதாக தகவல் வெளியாகின.
ஒரே நாளில் ஒரே சமயத்தில் நான், விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோரை வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் ஒரே நேரத்தில் மூவரையும் வைத்து விசாரணை செய்தால் குற்றச்சாட்டின் உண்மை தன்மையை கண்டறியலாம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கு என்னுடையது., வீரலட்சுமி- சீமான் இடையிலான பிரச்சனை அல்ல என்று விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், என்னைக் கேட்காமல், கயல்விழி, தேன்மொழியை வீரலட்சுமி அழைத்தது ஏன்? வீரலட்சுமி தனி ரூட்டில் செல்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. வீரலட்சுமி நிறுத்தவில்லை என்றால், சீமானுடன் சமாதானம் செய்து கொண்டு நான் பெங்களூருக்குப் போய்விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.