நான் ஆஜராகும்போது விஜயலட்சுமியும் ஆஜராக வேண்டும்: சீமான்
வியாழன், 14 செப்டம்பர் 2023 (17:55 IST)
காவல் நிலையத்தில் நான் ஆஜராகும் போது நடிகை விஜயலட்சுமி ஆஜராக வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாக சீமானிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சம்மனுக்கு பதில் அளித்த சீமான் நான் ஆஜராகும் போது நடிகை விஜயலட்சுமி அதே காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஒரே நாளில் ஒரே சமயத்தில் நான், விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோரை வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் ஒரே நேரத்தில் மூவரையும் வைத்து விசாரணை செய்தால் குற்றச்சாட்டின் உண்மை தன்மையை கண்டறியலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் சீமான் அளித்துள்ள இந்த மனுவுக்கு காவல்துறை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.