மர்மமான முறையில் 27 தெரு நாய்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (15:23 IST)
சென்னை தாம்பரம் மற்றும் மடிப்பாக்கத்தில் 27 தெரு நாய்கள் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்து சந்தேகத்தை ஏற்படுத்தியள்ளது. 


 
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை மடிபக்கம், தாம்பரம் பகுதிகளில் உள்ள  27 தெரு நாய்கள்  உயிரிழந்துள்ளது. இதனை கண்டு சந்தேகித்த ஜெருஸ்லாம் நகர், டிடிகே நகர், மல்லிகா நகரில் வசித்து வரும் மக்கள் பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 
 
இது தொடர்பாக புளூ கிராஸில்  புகார் கொடுக்குமாறு தெரிவித்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் கலந்தோசித்து  பின்னர் , வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
நாய்களுக்கு யாரேனும் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என சந்தேகித்து ,உயிரிழந்த நாய்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்