எம்.பிக்கு நெஞ்சுவலி; முன்னாள் அமைச்சருக்கு வயிற்றுவலி! – ஒரே மருத்துவமனையில் அவசர அனுமதி!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (09:14 IST)
நாடாளுமன்ற எம்.பி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் உடல்நல குறைவால் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் வயிற்றுவலியால் அவதிப்பட்ட நிலையில் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் எம்.பி கவுதம சிகாமணி நெஞ்சுவலி காரணமாக அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே மருத்துவமனையில் எம்.பி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்