ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிடுகிறாரா? பாஜக மாநில பொதுச் செயலாளர் தகவல்

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (10:36 IST)
பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்று கூறப்படும் ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியும் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. 
 
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் மோடி போட்டியிடுவார் எனவும், எனினும் இது குறித்து பாஜக மேலிடம் தான் இறுதி முடிவு செய்யும் என்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார் 
 
தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என பாஜக நிர்வாகிகள் ஏற்கனவே அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ராமநாதபுரம் தொகுதியில் உள்ள ராமேஸ்வரம் புனித தலங்களில் ஒன்று என்பதால் அந்த தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்