முதல்முறையாக சட்டசபைக்கு வந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வாழ்த்து..!

புதன், 12 ஏப்ரல் 2023 (10:26 IST)
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ முதல்முறையாக சட்டசபைக்கு இன்று வருகை தந்தார். 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார் என்பதை தெரிந்ததே. 
 
ஆனால் அவர் வெற்றி பெற்ற ஒரு சில நாட்களில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நுரையீரல் பிரச்சனை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் குணமாகி வீடு திரும்பிய ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது சட்டமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்தவுடன் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்