பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை தூர்தர்ஷனில் நேரலை செய்யாத காரணத்தால் சென்னை தூர்தர்ஷன் அதிகாரி வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், சென்னை ஐஐடி விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் “ஹேக்கத்தான்” தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதோடு மாணவர்களுடன் உரையாடினார்.
இந்த பட்டமளிப்பு விழாவை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குனர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வசுமதியை பணியிடை நீக்கம் செய்து பிரசாத் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சசி ஷேகர் நடவடிக்கை எடுத்துள்ளார். பிரதமரின் நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பு செய்யாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.