பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம்: போலீஸை பார்த்ததும் தப்பி ஓட்டம்!

திங்கள், 30 செப்டம்பர் 2019 (12:19 IST)
சென்னை வந்திருக்கும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த வந்த இளைஞர்கள் சிலர் போலீஸை கண்டதும் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடியில் நடைபெறும் பட்டமளிப்பு விழா மற்றும் “ஹேக்கத்தான்” போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வந்திருக்கிறார்.

கடந்த 2018ம் ஆண்டு மோடி இதேபோல சென்னை வந்தபோது காவிரி ஆணையம் அமைக்ககோரி மோடிக்கு கருப்பு கோடி காட்டியும், GoBackModi என்ற ஹேஷ்டேகுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மோடி மீண்டும் சென்னை வந்திருக்கும் சூழலில் போராட்டங்கள் நடைபெறமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னை வந்துள்ள மோடி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது கிண்டி தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் 7 பேர் கொண்ட கோஷ்டி மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி வந்துள்ளனர். தகவலறிந்த போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். போலீஸை கண்டதும் இளைஞர்கள் நாலா திசையிலும் தப்பித்து ஓடிவிட்டார்கள். இந்த சம்பவம் சிறிது நேரத்திற்கு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்