இ-சிகரெட்டுகளை இதற்காகதான் தடை செய்தோம்! – மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி!

ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (12:25 IST)
இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டதற்கான காரணங்களை விளக்கினார்.

புகையிலையில்லாமல் பேட்டரியில் செயல்படும் இ-சிகரெட்டுகள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது. இதுகுறித்து இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி ”இ-சிகரெட்டுகள் நாட்டின் இளைஞர்களை கெடுக்கின்றன. எந்தவொரு குடும்பத்திலும் யாரும் புகைக்கக்கூடாது என்பதையே நான் விரும்புகிறேன். இந்தியா போன்ற வளர்ந்து வரும் ஜனநாயக நாட்டை இ-சிகரெட்டுகள் கெடுப்பதை அனுமதிக்கலாகாது.

சுவாச பிரச்சினை, இதய கோளாறு, நரம்பியல் கோளாறு போன்ற பல நோய்களை மக்களுக்கு தரும் இ-சிகரெட்டுகளை தடை செய்வதன் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும்” என்று கூறியுள்ளார்.

மேலும் தீபாவளி வாழ்த்துகளை மக்களுக்கு தெரிவித்த பிரதமர் மோடி பட்டாசுகளை வெடிக்கும் போது நமக்கும், மற்றவர்களுக்கும் தீங்கு ஏற்படாதபடி பார்த்து வெடிக்குமாறு அறிவுறுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்