இந்த நிலையில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஆகியோரின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 3-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.