மோடியின் உருவப் படம் எரிப்பு: காங்கிரஸ் கட்சியினர் அட்டூழியம்!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (13:06 IST)
அரக்கோணத்தில் பிரதமர் மோடியின் உருவப் படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 4 நாட்களாக காங்கிரஸ் ராகுல்காந்தி அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் ஆஜர் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் கடந்த நான்கு நாட்களில் 38 மணி நேரம் விசாரணை செய்துள்ளதாகவும் இன்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதனையடுத்து இன்று 5வது நாளாக ராகுல்காந்தி ஆஜராவார் என்றும் அனேகமாக இன்றுடன் அவரிடம் விசாரணை முடிவடைந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியை விசாரணை செய்துவரும் அமலாக்கத் துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் செய்து வருகின்றனர். 
 
அதன்படி அரக்கோணத்தில் பிரதமர் மோடியின் உருவப் படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து அரக்கோணத்தில் எல்.ஐ.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்