மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இன்று இரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், தென்காசி, கோவை, சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது என்பதும், 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாகவே வெப்பம் பதிவாகி வருவதால், இன்று இரவு மழை பெய்தால் சென்னை மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.