ராகுல் காந்தியின் கோரிக்கை ஏற்பு: இன்று விசாரணை இல்லை!

வெள்ளி, 17 ஜூன் 2022 (07:46 IST)
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் கடந்த மூன்று நாட்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் போராட்டம் நடத்தினர் என்பதும் இந்த போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவதில் இருந்து மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்றைக்கு கோரிக்கை விடுத்தார். 
 
இந்த கோரிக்கையை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயார் சோனியா காந்தியின் உடல் நிலையை கவனித்து வருவதால் ராகுல்காந்தி அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்