4 நாட்களில் 38 மணி நேரம் விசாரணை: இன்றும் ஆஜராக ராகுல்காந்திக்கு உத்தரவு

செவ்வாய், 21 ஜூன் 2022 (08:00 IST)
நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் கடந்த நான்கு நாட்களில் 38 மணி நேரம் விசாரணை நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 4 நாட்களாக காங்கிரஸ் ராகுல்காந்தி அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் ஆஜர் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் கடந்த நான்கு நாட்களில் 38 மணி நேரம் விசாரணை செய்துள்ளதாகவும் இன்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதனையடுத்து இன்று 5வது நாளாக ராகுல்காந்தி ஆஜராவார் என்றும் அனேகமாக இன்றுடன் அவரிடம் விசாரணை முடிவடைந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
இந்த நிலையில் ராகுல் காந்தியை விசாரணை செய்துவரும் அமலாக்கத் துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்