திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

Mahendran

திங்கள், 14 ஜூலை 2025 (18:23 IST)
இன்று மதியம் 1:30 மணியளவில் திருப்பதி ரயில் நிலையம் அருகே ஹிசார் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
ராஜஸ்தானில் இருந்து ஆந்திர பிரதேசத்தின் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக, தீ விபத்து ஏற்பட்ட பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால், உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை.
 
இதுகுறித்து தகவல் அறிந்த  அணைக்க தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது சமூக விரோத செயலால் தீ விபத்து நடந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 
 
இந்த தீ விபத்து காரணமாக பக்கத்து தண்டவாளத்தில் வந்த வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டு தீ முழுவதும் அணைத்த பிறகு சென்றது, மேலும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சேதமடைந்த பெட்டிகள் மேல் விசாரணைக்காக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்