ரஜினி உடல்நிலை: போனில் விசாரித்த முக ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2020 (16:08 IST)
ரஜினி உடல்நிலை: போனில் விசாரித்த முக ஸ்டாலின்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்றுமுன்னர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு மட்டுமே உள்ளது என்றும் அது தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் குறிப்பாக கோவிட்19 தாக்குதல் அவருக்கு இல்லை என்றும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
முக ஸ்டாலினிடம் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் பேசியதாகவும், அவரது உடல்நலம் குறித்து முக ஸ்டாலின் அக்கறையுடன் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்