இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் செலவை அரசே ஏற்கும்! – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (12:21 IST)
பொறியியல் படிப்பில் அரசு இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி செலவை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று பி.இ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “அரசுப்பள்ளிகளில் பயின்று 7.5% உள் ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணம், கலந்தாய்வு கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணத்தை அரசே ஏற்கும். இது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்குப் பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்