தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா இறந்தபிறகு பொதுசெயலாளராக சசிக்கலா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் சிறை தண்டனை பெற்ற பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.