மணிகண்டன் இறப்பு குறித்து சர்ச்சைக் கருத்து! - மாரிதாஸ் மதுரையில் கைது!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (15:31 IST)
மணிகண்டன் இறந்த விவகாரத்தில் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக யூட்யூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல யூட்யூபரான மாரிதாஸ் முன்னதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சில முறை கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மணிகண்டன் என்ற இளைஞர் ராமநாதபுரம் காவல் நிலையத்திலிருந்து வீடு திரும்பி சில மணி நேரங்களில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த மாரிதாஸ், இந்த சம்பவம் குறித்து காவல்துறை, ஆளும்கட்சி மற்று மீடியா உள்ளிட்டவற்றை சர்ச்சைக்குரிய வகையில் பேசி பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மதுரையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்