பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் கோஷ்டி மோதல்! – மக்கள் அதிர்ச்சி!

வியாழன், 9 டிசம்பர் 2021 (09:13 IST)
சென்னை ஆவடி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே பொது இடங்களில் அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. முக்கியமாக மின்சார ரெயில்கள், பேருந்துகளில் ரூட்டு தல விவகாரங்கள் போன்றவற்றால் ஏற்படும் தகராறுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று ஆவடியில் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அவர்களிடையே திடீர் சலசலப்பு எழுந்துள்ளது. சிறிது நேரத்தில் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்த மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள தொடங்கியுள்ளனர். இந்த மோதலில் மாணவிகளும் எதிர்கோஷ்டி மாணவிகளுடன் தரையில் உருண்டு, ஒருவரையொருவர் தாக்கி சண்டை போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்