10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி: அரசியல்வாதிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர்

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (08:04 IST)
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில்  மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் படித்து வரும் 10ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான், பாமக நிறுவனர் ராமதாஸ், இயக்குனர் உள்பட ஒருசில அரசியல் கட்சி தலைவர்களும், இயக்குனர் பா ரஞ்சித் உள்பட சில திரையுலக பிரபலங்களும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தற்போது தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார் இந்த அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
குறிப்பாக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: மராட்டிய மாநிலத்தில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும்  தேர்ச்சி அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது. பா.ம.க. கோரிக்கைக்கு வெற்றி; முதலமைச்சருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்