மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ஆக ரத்தினவேல் மீண்டும் நியமனம் !

Webdunia
புதன், 4 மே 2022 (11:52 IST)
மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ஆக ரத்தினவேல் மீண்டும் நியமனம் !
மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது
 
சமீபத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதால் சர்ச்சைக்குள்ளான நிலையில் மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேலு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் 
 
இதனை அடுத்து அரசு மருத்துவர்கள் சங்க முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் 
 
இந்த நிலையில் தற்போது மதுரை மருத்துவக் கல்லூரியில் மீண்டும் ரத்தினவேல் டீன் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்