சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம்: முதல்வருக்கு மருத்துவர் சங்கம் கடிதம்

திங்கள், 2 மே 2022 (18:48 IST)
மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு என்பவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் முதல்வருக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளது.அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
சமஸ்கிருத உறுதிமொழி என்பது தேவையற்றது என்பதை ஏற்கனவே தமிழக மருத்துவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஆனால் தற்போது அந்த கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு என்பது எந்தவித உள்நோக்கத்துடன் நடத்தப்படவில்லை. தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த இந்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
எனவே எந்தவித உள்நோக்கம் இல்லாத காரணத்தினால் இந்த நிகழ்வுக்கு முதல்வரை பொருப்பாக்கி அவரை இந்த பதவியிலிருந்து இறக்கி வைத்திருக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளது .

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்