சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை; மருத்துவக் கல்லூரி டீன் மீது நடவடிக்கை!

ஞாயிறு, 1 மே 2022 (12:41 IST)
மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் டீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மருத்துவக்கல்லூரியில் புதிதாக சேர்ந்த 250 மாணவர்கள் கல்லூரியில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

அப்போது மாணவர்கள் உறுதிமொழி ஏற்றபோது இப்போகிரெடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழியை வாசித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமண்யன் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு பின் டீன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது கல்லூரி டீன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்