ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளர்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:19 IST)
ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளர்
மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தற்கொலை செய்துகொண்ட தூய்மை பணியாளரின் பெயர் வேல்முருகன் என்றும் அவர் வண்டியூரை சேர்ந்தவர் என்றும் தூய்மை பணியாளராக பணியாற்றி கொண்டிருக்கும் அவர் மதுரை ஆட்சியர் சற்றுமுன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள தல்லாகுளம் காவல் துறையினர் வேல்முருகனின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்