சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு; கண்டன ஆர்ப்பாட்டம் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (19:25 IST)
ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயரும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது குறித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுங்க கட்டணத்தை வருடம் தோறும் உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று காலை 11 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 
 
எனவே அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்களுடன் அருகில் உள்ள சுங்கச்சாவடியில் திரள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது மாவட்ட கண்காணிப்பு அலுவலங்களில் முறையான அனுமதி பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்