கவர்னர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் - ஜவஹிருல்லா அறிக்கை
வியாழன், 9 மார்ச் 2023 (23:28 IST)
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்டமுன்டிவங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி வரும் 17 ஆம் தேதி கவர்னர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணமிழந்த பலர் தங்கள் உயிரை மாய்த்து வருகின்றனர். இது அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஆளுங்கட்சியினர், எதிர்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 10.06.2022 அன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைப்பட்டது, அக்குழு தன் அறிக்கையை 27.06.22 அன்று முதலமைச்சரிடம் அளித்தனர்.
அதன்பின்னர், ஆன்லைன் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கவர்னர் அதற்கான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுனர் ஆர்.என்.ரவி இரண்டாவது முறையாக அரசுக்கு திரும்பி அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று ஒரு அறிக்கையிட்டுள்ளார்.
அதில், ''தமிழக அரசு நிறைவேற்றிய சட்டதில் சந்தேகங்கள் இருப்பதாக கவர்னர் கூறிய நிலையில், சட்ட அமைச்சர் ரகுபதி கவர்னரை நேரில் சந்தித்து, விளக்கமளித்தார். ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை 142 கிடப்பிலுள்ளதால், இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
கவர்னர் சட்ட சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது வன்மையாகக் கண்டடிக்கத்தக்கது. தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட சட்ட முன்வடிவங்களுக்கு அவர் ஒப்புதல் அழிக்காமல் காலம் தாழ்த்தி வருவது மக்களை அவமதிப்பதாகும்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் எதேச்சதிகார செயலைக் கண்டித்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்டமுன்டிவங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி வரும் 17 ஆம் தேதி கவர்னர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்பாட்டம் நடத்தப்படும் ''என்று தெரிவித்துள்ளார்.