ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர டெல்லி பாஜக முயற்சிக்க வேண்டும் என்றும், அதேபோல் ஓ.பி.எஸ்-ம் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.மேலும் ஓ.பன்னீர்செல்வத்துடன் தான் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அமித்ஷா அறிவிக்க வேண்டும் என்றும், அவர் அறிவித்தால் அதை கூட்டணி கட்சிகளாகிய நாங்கள் ஏற்றுக்கொண்டு, அந்த வேட்பாளரை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியை சந்திக்க நயினார் நாகேந்திரன் உதவவில்லை என்று ஓ.பி.எஸ். குற்றம் சாட்டிய நிலையில், நயினார் நாகேந்திரன் அதனை மறுத்தார். இந்த சூழலில் டி.டி.வி.தினகரனின் இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.