கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

Prasanth K

ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (14:59 IST)

மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் நடந்து வரும் நைட் டான்ஸ் பார்கள் குறித்து நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் பேசியதை தொடர்ந்து, அவரது தொண்டர்கள் உள்ளே புகுந்து பார்களை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் பெங்களூர், மும்பை, ஐதராபாத் என பல பெரு நகரங்களில் இரவு நேர டான்ஸ் பார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, சத்ரபதி சிவாஜியின் தலைநகரமாக விளங்கிய ராய்கட்டில் இரவு நேர மது விருந்துகள், டான்ஸ் உள்ளிட்ட கேளிக்கை பார் அதிகரித்துள்ளதாகவும், பலரும் இந்த பார் டான்ஸுக்கு அடிமையாகியுள்ளதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

 

அதை தொடர்ந்து நவநிர்மாண் சேனா கட்சியினர் டான்ஸ் பார்களுக்கு மிரட்டல் விடுத்து வந்த நிலையில், அவர்களோடு சிவசேனா கட்சியினரும் சேர்ந்து கொண்டு பன்வெலில் உள்ள நைட் பார் ஒன்றை அடித்து துவம்சம் செய்துள்ளனர். அவர்கள் கையில் ஆயுதங்களோடு சென்று பாரை தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மகாராஷ்டிராவில் மராத்தி மட்டும்தான் பேச வேண்டும் என நிர்மாண் சேனாவினர் பிரச்சினை செய்து சிலரை அடித்தது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்