இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடக்கும், விரைவில் அட்டவணை: அண்ணா பல்கலை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (11:31 IST)
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வெளியான நிலையில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற யுஜிசி உத்தரவு செல்லும் என்றும் தேர்வுகளை நடத்த காலக்கெடு வேண்டுமானால் கேட்கலாம் என்றும் தேர்வு எழுதாமல் மாணவர்கள் பாஸ் என்று அறிவிக்க மாநிலங்கள் கோரிக்கை விட முடியாது என்றும் சற்று முன்னால் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது
 
இந்த தீர்ப்பை அடுத்து இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. யுஜிசி வழிமுறைகளை பின்பற்றி அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நிச்சயமாக நடத்தப்படும் என்றும் விரைவில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பால் இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்போது தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்