மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும்: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (11:03 IST)
இந்தியாவின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 
 
கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகின்ற நிலையில் திடீரென அதிமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கேபி முனுசாமி மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் நரேந்திர மோடி தான் இந்தியாவின் ஆள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் புகழை உலகமெங்கும் பரப்பி வருகிறார் என்று கூறிய அவர் அதிமுக மற்றும் பாஜக இடையே சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்று கூறினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்