அண்ணாமலை சர்வாதிகாரி போல் நடந்து கொண்டார்- பாஜகவில் இருந்து விலகிய பாக்யராஜ் அறிக்கை

வெள்ளி, 10 மார்ச் 2023 (18:50 IST)
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சமீபத்தில்  நடிகை காயத்ரி ரகுராம் விலகிய நிலையில் சில தினங்களுக்கு முன் பாஜகவின் ஐடிவிங் தலைவராக இருந்த சிடி.ஆர். நிர்மல் குமார்  மற்றும் திலிப் கண்ணன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இதையடுத்து, சென்னை மேற்கு மாவட்ட பாஜக தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகினர்.

இந்த நிலையில், பிப்ரவரி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை சர்வாதிகாரியாக நடந்து கொண்டதாகக் கூறி இன்று பாஜகவின் தருமபுரி கிருஷ்ணகிரி மேற்கு  மாவட்ட பொறுப்பாளர் பாக்யராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பபாளர் (சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு) பதவியிலிருந்தும், பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கின்றேன்.

தம்பி திரு.அண்ணாமலை அவர்களுக்கு சகோதரர் திரு. CTR. நிர்மல்குமார் அவர்களின் வளர்ச்சி (பா.ஜ.க.விலும்) சமூக ஊடகங்களிலும் தன்னைவிட அபரிமிதமான வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடிய வில்லை ஆதலால் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே முடிவில் இருந்தார் ஏன் என்றால் தன் இடத்திற்கு வந்து விடுவார் என்ற அச்சம்.

தம்பி திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த மாதம் (பிப்ரவரி) டில்லி செல்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு IT Wing மற்றும் sports and skill development ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டதினால் தங்களுக்கு நேர் எதிர் குணம் கொண்ட பொறுமை, நிதானம், பண்பு, அன்பு, பாசம், தெளிவு மற்றும் அரசியலுக்கான சகிப்புத்தன்மை உள்ள C.T.R. நிர்மல்குமார் அவர்களின் வழியில் பயணிப்பதில் மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்