சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குஷ்பு திடீர் போராட்டம்.. என்ன காரணம்?

வெள்ளி, 10 மார்ச் 2023 (19:39 IST)
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குஷ்பு உள்பட பாஜகவினர் திடீரென போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சமீபத்தில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
 
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ,மாநில துணை தலைவர்கள் கரு நாகராஜன், திருப்பதி நாராயணன் உள்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் 
 
அண்ணாமலை போன்ற இமாலய தலைவர் மீது வழக்கு போட்டால் மிரண்டு போய் அறையில் உட்கார்ந்து விடுவார் என முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் அது தவறு என்றும் வழக்கு போட்ட இரண்டாவது நாள் நாகர்கோவிலுக்கு சென்று பேசிய முதல்வர் ஆட்சியை கலைக்க பார்க்கிறார்கள் என பயந்தது ஏன் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் கரு நாகராஜன் பேசினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்