மாண்டஸ் புயல் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மாண்டஸ் புயல் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் காய்கறிகளின் தேவையும் குறைந்து உள்ளதால் காய்கறிகளை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலோ 12 ரூபாய் மட்டுமே என்றும், பீன்ஸ், முட்டைகோஸ், கத்தரிக்காய் ஆகியவை கிலோர் ரூ.10க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 என்றும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.49 என்றும் விற்பனையாகி வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.