202வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

வெள்ளி, 9 டிசம்பர் 2022 (08:07 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 201 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்று 202வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லை என்ற அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்