தனியார் பேருந்தை கடத்திய மர்ம நபர்.. போலீசார் விரட்டி பிடித்த போது காயம்..!

Siva
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (15:31 IST)
தூத்துக்குடி அருகே தனியார் பேருந்தை மர்ம நபர் ஒருவர் கடத்திய நிலையில் அவரை காவல்துறையினர் விரட்டி பிடித்த போது பேருந்து கடத்திய நபருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

தூத்துக்குடி அருகே தனியார் பேருந்து ஒன்று வழக்கம் போல் கிளம்பிய நிலையில், பஸ்ஸை சாலை ஓரம் நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றார். அப்போது திடீரென மர்ம நபர் பஸ்ஸை கடத்திய நிலையில், டிரைவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருச்செந்தூர் - தூத்துக்குடி மெயின் ரோட்டில் அந்த பேருந்து சென்று கொண்டிருப்பதாக கூறிய நிலையில், காவலர்கள் உடனடியாக ஜீப்பில் அந்த பேருந்தை விரட்டினர். குரும்பூர் அருகே பேருந்து கடத்திய நபர் பேருந்து நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

அப்போது காவல்துறையினர் அவரை விரட்டிப் பிடித்த போது அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. முதல் கட்ட விசாரணையில், பேருந்தை கடத்திய நபரின் பெயர் தமிழன்பன் என்றும்,   கூறப்படுகிறது. சிகிச்சைக்கு பின்னரே அவரிடம் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்