உட்கார்ந்து பதில் சொன்னதால் வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை..!

Siva

வெள்ளி, 18 அக்டோபர் 2024 (13:01 IST)
தகவல் ஆணைய வழக்கு விசாரணையில் உட்கார்ந்து பதில் அளித்த அதிகாரி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக அரசின் நாளிதழ் விளம்பர செலவு குறித்த   கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அரசு பதில் அளிக்காததால் 2015 ஆம் ஆண்டு மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த விசாரணையின் போது மனுதாரர் சிவ இளங்கோ உட்கார்ந்து கொண்டு பதில் அளித்தார். நின்று கொண்டு பதில் அளிக்க வேண்டும் என தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதி கூறியதை ஏற்காததால், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று நாட்கள் சிவ இளங்கோ சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன் விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுமார் பத்து ஆண்டுகள் நடந்தது என்பதும் 140 முறை வாய்தா வாங்கிய நிலையில் சிவ இளங்கோவை வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் ஆர்டிஐ கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்