தளபதியின் ரசிகர் என்ற பதவியே போதும்.. பொதுச்செயலாளராக இருக்க ஆசையில்லை! - புஸ்ஸி ஆனந்த் பேச்சு!

Prasanth Karthick
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (15:30 IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய புஸ்ஸி என்.ஆனந்த் தன்னுடைய பொதுச்செயலாளர் பதவி தற்காலிகமானது என கூறியுள்ளார்.

 

 

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அதன் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதியில் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான அரசு அனுமதியை பெற்று, நிலத்தை தேர்வு செய்து பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

 

இந்நிலையில் த.வெ.க முதல் மாநாட்டிற்கான அரசியல் பயிலரங்கம் சேலம் ஆத்தூரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்கத்தில் தவெக சேலம் மாவட்ட பொறுப்பாளர் பார்த்திபன், புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து வணங்கினார்.
 

ALSO READ: இன்றிரவு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
 

பின்னர் கட்சி பொறுப்பாளர்கள் இடையே பேசிய புஸ்ஸி என்.ஆனந்த் “பெற்றோரை தவிர யார் காலிலும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் விழக் கூடாது. உழைப்பவர்களுக்கு எதிர்பார்ப்பில்லாமல் அங்கீகாரத்தை கட்சியில் தலைவர் விஜய் வழங்குவார். நான் இந்த கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் இல்லை. இந்த பதவி தளபதி எனக்கு தந்தது. இதை எப்போது வேண்டுமானாலும் அவர் மாற்றலாம்.

 

நம் கட்சியில் பதவி என்பது யாருக்கும் நிரந்தரமானது இல்லை. தளபதி ரசிகர் என்ற பதவியே என்னோடு இருக்கும். வாழ்நாள் முழுவதும் தளபதியோடு இருக்கவே விரும்புகிறேன்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்