கன்னியாகுமரியில் திடீர் சூறைக்காற்று: விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை ரத்து..!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (14:09 IST)
கன்னியாகுமரியில் திடீரென சூறைக்காற்று வீசியதை அடுத்து 6 மணி நேரம் படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் கடற்கரை கிராமங்களில் மீன் பிடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டது.  

இந்த நிலையில் தற்போது பள்ளி  அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் கன்னியாகுமரியில் அலைமோதி வரும் நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் கடல் நீர்மட்டம் தாழ்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.

சூறைக்காற்று காரணமாக விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் எடுக்க வரிசையில் நின்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதன் பின்னர் 6 மணி நேரம் கழித்து கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளன

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்