முதல்வரை சந்தித்த கண்ணதாசன் குடும்பத்தினர்: மரியாதை நிமித்த சந்திப்பு என தகவல்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (09:47 IST)
முதல்வரை சந்தித்த கண்ணதாசன் குடும்பத்தினர்: மரியாதை நிமித்த சந்திப்பு என தகவல்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக பல திரையுலக பிரமுகர்கள் கடந்த சில நாட்களாக சந்தித்து வருகின்றனர் என்பதும் அவர் முதல்வர் ஆனதற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
அந்தவகையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் சந்தித்துள்ளனனர். கண்ணதாசன் குடும்பத்தை சேர்ந்த அமுதா கலைவாணன் கண்ணதாசன், டாக்டர் சத்தியலட்சுமி, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முதல்வரை சந்தித்தார்கள் என்றும் இது ஒரு மரியாதை நிமித்தம் சந்திப்பு என்று கூறப்படுகிறது
 
மேலும் இந்த சந்திப்பின்போது கண்ணதாசனின் சில புத்தகங்களை முதல்வருக்கு அவர்கள் பரிசாக வழங்கினார்கள். என்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்