தமிழகத்தில் 100 கோடி ஒதுக்கீடு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

செவ்வாய், 29 ஜூன் 2021 (19:40 IST)
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்  கொரொனா 3 வது அலையை எதிர்கொள்ள  தமிழக அரசு ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது.

 மேலும், இரண்டாவது அலையை சிறப்புடன் எதிர்கொண்டது போன்று அடுத்து வரவுள்ள 3 வது அலையை எதிர்கொள்ள வேண்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளார். அரசு மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும்,  அதற்கான நிதியை ஒதிக்கீடு செய்துள்ளார் முதல்வர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மக்களும் அரசின் விதிமுறைகள் நெறிமுறைகளைப் பின்பற்றி நடந்தால் முதலிரண்டு அலைகளைப் போலவே 3 வது அலையை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம் என சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்