தேர்தல் தொடர்பாக கமல் நாளை முக்கிய அறிவிப்பு!

Sinoj
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (18:04 IST)
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்  நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள திமுக கட்சி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருக்கிறது. ஏற்கனவே, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
 
நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்  வெளியானது.
         
இந்த நிலையில், வரவுள்ள மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்தாலும், டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட கமல் முடிவு செய்திருந்தார்.
 
இந்த நிலையில்,  தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் 2024  நாடாளுமன்ற தேர்தலில்  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  பேட்டரி டார்ச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது.
 
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள  நிலையில், நாளை இக்கட்சியின்  7வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட உள்ளது.
 
எனவே  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான்  முக்கிய அறிவிப்பை கமல்ஹாசன் நாளை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்து, இன்று காணொலி  வாயிலாக தன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
 
இதனால், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பற்றிய அறிவிப்புக்காக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
 
காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸுக்கு வழங்கும் தொகுதிகளில் இரண்டு கமலின் கட்சிக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்