நடிகையும் பாஜக துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி கைது!

Sinoj

செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (16:48 IST)
பிரபல நடிகையும், பாஜக துணைத்தலைவியுமான ஜெயலட்சுமி  கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சினேகன் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் நடிகையும், பாஜக துணைத் தலைவியுமான ஜெயலட்சுமியை  போலீஸார்  கைது செய்துள்ளனர்.
 
அறக்கட்டளையின் உரிமை தொடர்பாக சினேகனுக்கும்,  ஜெயலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், நடிகை   ஜெயலட்சுமி மீது  பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
 
இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் நடிகை ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியாக சினேகன் செயல்பட்டு  வருவது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்