திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லையா? குறி வைக்கும் திமுக இளைஞரணி பிரபலம்..!

Siva

செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (15:36 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திருப்பூர் தொகுதியில் இடது கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட நிலையில் தற்போது இந்த தொகுதியை திமுக இளைஞரணி சேர்ந்த பிரபலம் ஒருவர் குறி வைத்திருப்பதாகவும் இதனால் இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த தொகுதியில் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

 கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திருப்பூர் தொகுதியில் திமுக இளைஞரணி சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே  திமுகவே இந்த தொகுதியை வைத்துக் கொள்ளும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனால் திருப்பூரைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் திருப்பூரை விட்டுக் கொடுக்க அக்கட்சி விரும்பவில்லை

ஆனால் அதே நேரத்தில் திமுக வலியுறுத்தினால் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. திருப்பூர் தொகுதி ஒருவேளை கிடைக்கவில்லை என்றால் நாகப்பட்டினம் மற்றும் தென்சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளை கேட்க கம்யூனிஸ்ட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்