அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க டெல்லி செல்கிறார் கமல்

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (06:30 IST)
நடிகரும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரசியல் களத்தில் குதித்ததில் இருந்து பல்வேறு பிரமுகர்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர்களிடம் கமல்ஹாசன் நெருக்கத்தில் உள்ளார். 
 
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் புதிய முதல்வராக பதவியேற்ற குமாரசாமியை சந்தித்து காவிரி பிரச்சனை குறித்தும் ஆலோசனை செய்தார். இந்த சந்திப்பின் பலனாக காவிரியில் இருந்து கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதாகவும், அதற்காக தான் நன்றி கூறி கொள்வதாகவும் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஒன்பது நாட்களாக டெல்லி துணை நிலை ஆளுனர் அலுவலகத்தில் நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை நேற்றுடன் நிறுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்