போராட்டம் செய்வதென்றால் வெளியில் சென்று போராட்டம் செய்யுங்கள், டெல்லி துணை நிலை ஆளுனர் இல்லத்தில் போராட்டம் நடத்த யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது என்று டெல்லி ஐகோர்ட் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விளாசியுள்ளதால் ஆம் ஆத்மியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் ஏ.கே. சாவ்லா, நவீன் சாவ்லா ஆகியோர் டெல்லி முதல்வருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். நீங்கள் போராட்டம் நடத்துவதென்றால் துணை நிலை அலுவலகத்துக்கு வெளியே தாராளமாக நடத்தலாம். நீங்கள் அலுவலகத்துக்குள் அமர்ந்து போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது யார்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வேறு ஒருவருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்துக்குள் அமர்ந்து போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்றனர்.