கமல் தத்தெடுத்ததால் பன்றிக்காய்ச்சலா? ஊடகங்களுக்கு ரசிகர்கள் எச்சரிக்கை

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (08:07 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகத்தூர் என்ற கிராமத்தை சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தத்தெடுத்தார். அதன் பின் அந்த கிராமத்திற்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் அதிகத்தூர் கிராமத்தில் சமீபத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் மிக வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த செய்தியை வெளியிடும் ஒருசில ஊடகங்கள் 'கமல் தத்தெடுத்த கிராமத்தில் பரவும் பன்றிக்காய்ச்சல் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த தொகுதியின் எம்.எல்.ஏஆக இருக்கும் ராஜேந்திரன் என்பவர் திமுக கட்சியில் இருப்பவர். திமுக எம்.எல்.ஏவாக இருக்கும் கிராமத்தில் பன்றிக்காய்ச்சல் என்றோ, அதிமுக அரசின் அலட்சியத்தால் பரவும் நோய் என்றோ தலைப்பு போட தைரியம் இல்லாத ஊடகங்கள் கமல் தத்தெடுத்ததால்தான் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது என்ற ரீதியில் செய்தி வெளியிட்டு தங்கள் தரத்தை குறைத்து கொள்வதாகவும் இனியும் இதுபோன்ற தலைப்புகளில் செய்தி வெளியிட்டால் தங்களுடைய கடும் எதிர்ப்பை அந்த ஊடகங்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கமல் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்