30ஆம் தேதி மேல்முறையீடு: 18 எம்.எல்.ஏக்கள் அதிரடி முடிவு

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (07:53 IST)
18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் பதவி தகுதி நீக்கம் செய்தது செல்லும் என 3வது நீதிபதி சத்தியநாராயணன் சமீபத்தில் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கினார். இதனால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் பதவி இழந்தனர். அதிமுக ஆட்சியும் இப்போதைக்கு எந்த ஆபத்தும் இன்றி தப்பியது.

இந்த நிலையில் நேற்று தினகரன் தலைமையில் தகுதி இழந்த 18 எம்.எல்.ஏக்கள் மதுரையில் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் தேர்தலை சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் வரும் 30-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் 3-ஆவது நீதிபதி சத்தியநாராயணாவின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தினகரன் ஆதரவாளரும் தகுதி இழந்த எம்.எல்.ஏக்களின் ஒருவருமான தங்கத்தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்